555. கல்கியில் நண்பர் பாசிடிவ் அந்தோணியின் கட்டுரை
எனது அந்தோணிக்கு உதவி வேண்டி என்ற இடுகையின் வாயிலாக அந்தோணியுடனான நட்பு தொடங்கியது. அசாத்தியமான தன்னம்பிக்கையும், தன் உழைப்பில் சம்பாதித்து வாழ வேண்டும் என்ற திடமான எண்ணமும் மிக்கவர் என்பதை முதல் சந்திப்பிலேயே புரிந்து கொள்ள முடிந்தது. மனச் சோர்வான சில சமயங்களில், அவருடன் பேசி மனத்தெளிவடைந்திருக்கிறேன். அந்தோணி தொடர்பான என் இடுகைகள் கீழே:
http://balaji_ammu.blogspot.com/2008/08/452.html
http://balaji_ammu.blogspot.com/2008/04/431.html
சமீபத்திய கல்கி சுயமுன்னேற்றச் சிறப்பிதழில் (07.03.2010) அந்தோணியின் கட்டுரை வெளிவந்திருக்கிறது. அதை ஸ்கேன் செய்து இட்டிருக்கிறேன். கிளிக் செய்து பெரிதாக்கி வாசிக்கவும்.
இலக்குகள் பற்றி அந்தோணியைக் கேட்டால்,
"தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் இவற்றில் அடிப்படையிலான துறையில் சுயபரிசோதனைகளை சகமானுடத்துடன் பகிர வேண்டும். கேட்பவர்களுக்கெல்லாம் இல்லை என்று சொல்லாது கொடுக்கும் நிலைக்கு உயர வேண்டும்" என்கிறார்.
என்ன ஒரு உயர்வான சிந்தனை! வாழ்க!
அன்புடன்
பாலா
4 மறுமொழிகள்:
Test comment!
அந்தோணிமுத்து பாராட்டுக்குரியவர்.. வாழ்த்துகள்
நல்ல கட்டுரை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
அந்தோணி முத்துவின் அன்பால் பல்ன் பெறுபவன். எனது வலைப்பதிவிலும் நகல் செய்துள்ளேன். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு வலைப்பதிவாளர்கள் அனைவரும் அந்தோணி முத்துவிற்காக உரக்கக் குரல் எழுப்ப வேண்டும்.கல்க்யின் நகலை மட்டுமேனும் அனுப்புவோம். நிரந்தரத் தீர்வு நிச்சயம் கிடைக்கும்.
Post a Comment